( வாஸ் கூஞ்ஞ) 11.12.2025
எதிர்வரும் 13ந் திகதி ஜனாதிபதி மன்னாருக்கு வருiகைதர இருப்பதால் இதற்கான முன்னோடி ஆலோசனைகளும் மன்னாரில் பாதி;ப்படைந்துள்ள முக்கிய விடயங்களை கவனத்தில் எடுத்து அவற்றை புனரமைத்து மக்களின் இயல்பு வாழ்க்கைகளை முன்னெடுத்துச் செல்ல கூட்டுறவு பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில்;தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கடும் மழையினால் உருவாகிய அனர்த்த நிலைமைகளை மேலதிகமாக பரிசீலிப்பதற்கான விஷேட ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் புதன்கிழமை (10.12) மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கூட்டுறவு பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடல் முடிவில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இங்கு தெரிவிக்கையில்
மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவின் தலைவரும் கூட்டுறவு பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் மன்னார் மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கடும் மழையினால் உருவாகிய அனர்த்த நிலைமைகளை மேலதிகமாக பரிசீலிப்பதற்கான விஷேட ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் பிரதேச மற்றும் நகர சபை தவிசாளர்கள் திணைக்கயங்களின் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். தற்பொழுது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அவர்களை தயார் படுத்தும் நோக்குடன் தற்பொழுது தடைப்பட்டிருக்கும் வீதிகள் புனரமைக்கப்பட்டு மக்கள் போக்குவரத்து செய்யும் தன்மையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தப்பட்டது. வீதி அபிவிருத்தி திணைக்களம் நகர- பிரதேச சபைகள் ஆகியோருக்கு அமைச்சர் அவர்களால் இது தொடர்பாக வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் அனர்த்ததிற்கு முன்பாக மன்னார் மாவட்டத்தில் 35 ஆயிரம் ஏக்கரில் காலபோக விவசாயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் தற்பொழுது அனர்த்தத்தின் காரணமாக 20 ஆயிரம் ஏக்கர் விவசாயம் அழிவுக்கு உள்ளாகியுள்ளது.
எனவே அழிவுக்கு உள்ளான இந்த நெற் செய்ihயை மீளவும் பயிர் செய்வதற்கு தயார் படுத்தும்படியும் இதற்கு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் மற்றும் விதை நெல் பசளைகள் போன்றவற்றை வழங்க வேண்டிய அறிவுறுத்தல்களும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு வழங்கப்கட்டது.
இதனைவிட மன்னார் மாவட்டத்தில் அழிவுற்ற மாகாண- மத்திய மற்றும் கமநல திணைக்களங்களுக்கு சொந்தமான குளங்கங்களை தற்காலிகமாக என்றாலும் புனரமைத்து விவசாயிகளின் நலன்கருதி ஏற்பாடுகளை பூர்த்தி செய்யுமாறு இது தொடர்பான திணைக்களங்களுக்கு அமைச்சரால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் மக்கள் தற்பொழுது மீளக்குடியேறி வருகின்றனர். மீளக்குடியேறி வரும் மக்களுக்கான வசதிகளாக அவர்களுக்குரிய உலர் உணவு வகைகள் இவர்களின் வீடுகளை துப்பரவு செய்வதற்கான 25 ஆயிரம் ரூபா வழங்குவதற்கான ஆலோசனைகளும் அமைச்சரால் வழங்கப்பட்டது.
எதிர்வரும் 13ந் திகதி சனிக்கிழமை ஜனாதிபதி அவர்கள் மன்னாருக்கு வருகைத்தர இருக்கின்றார். இவரின் வருகையின்போது எடுக்க வேண்டிய ஆலோசனைகளும் அமைச்சர் வழங்கி இருந்தார்.
(வாஸ் கூஞ்ஞ


