வாஸ் கூஞ்ஞ); 10.12.2025
மன்னார் – பெரியமடு- காயாநகர் கிராமங்களில் அமைந்துள்ள ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு ஆழ்துளையிடும் கிணறு அமைப்பதற்கு 110-000 ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.
இவ் உதவித் திட்டத்தினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் செ.மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்
அத்துடன் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் உள்ள- காத்தான்குளம் கிராமத்தில் 55 குடும்பங்களுக்கும்
மன்னார் பிரதேச செயலக நிர்வாகத்தில் உள்ள பெரியகமம் கிராமத்தில் 25 குடும்பங்களுக்கும் மன்னார் – மடு பிரதேச செயலக நிர்வாகத்தில் உள்ள குஞ்சுக்குளம் கிராமத்தில் 20 குடும்பங்களுக்கும்
400இ000 ரூபா பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருள்கள் (அரிசிஇ பருப்புஇ சீனிஇ மாஇசோயாமீற்இதேயிலை ) உள்ளடங்களாக வழங்கப்பட்டது.
இவ் உதவி திட்டத்தினையும் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் செ.மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று திங்கள் கிழமை (08.12) வழங்கி வைத்தார்


