ஹஸ்பர் ஏ.எச்_
சீரற்ற கால நிலை மற்றும் திட்வா புயல் காரணமாக கடந்த 27, 28 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கவும், இழப்புகள் தொடர்பான விபரங்களை பெறுவதற்கும் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் தொடர்ச்சியாக மூதூர், கிண்ணியா, ஈச்சிலம்பற்று போன்ற இடங்களில் நடமாடும் சேவை நடாத்தப்பட்டது தொடர்ந்தும் இன்று (11.12.2025 ) திருகோணமலை மாவட்ட சேருநுவர பகுதியில் அரச கால்நடை வைத்தியர்களால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கான சிகிச்சை, அனர்த்தத்தின் பின்னரான பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான தெளிவூட்டல்கள், மற்றும் அனர்த்த பாதிப்பின் கள ஆய்வு என்பனவும் செய்யப்பட்டன.
இதன் போது 50 க்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் பயன் பெற்றதுடன் 120 க்கும் மேற்பட்ட விலங்குகளுக்கான சிகிச்சைகளும் வழங்கப்பட்டது.
இதில் பிரதேச கால் நடை வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
—


