மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிரான், புலிபாய்ந்தகல் பகுதியில் மட்டக்களப்பு சுகாதார சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து அபயம் அமைப்பு நடாத்திய இலவச வைத்திய மருத்துவமுகாம் 06.12.2025ஆம் திகதி இடம்பெற்றது.
இவ்வைத்திய முகாமில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர், சந்திவெளி வைத்தியசாலை, கிரான் சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரும் இணைந்திருந்தனர். இதில் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன்பெற்றனர்.




