எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு சாத்தியவள திட்ட அறிக்கை தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (10) பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஷ் அம்மணியின் வழிகாட்டலில் நிருவாக உத்தியோகத்தர் வே. தவேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வளவாளராக பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் அ.சுதர்சன் கலந்து கொண்டார்.
இப்பயிற்சி நெறியினூடாக உத்தியோகத்தர்களுக்கு சாத்தியவளங்களை அடையாளம் காணல் மற்றும் அவற்றின் பெறுபேறுகளை அறிக்கைப்படுத்தல் போன்ற விடயங்கள் குறித்த தெளிவூட்டல் வழங்கப்பட்டது.


