ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை,தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீரற்ற கால நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உலர் உணவுப் பொதிகள் இன்று (11)பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் உலர் உணவுப் பொதிகளை லங்கா ஐ.ஓ.சி(Lanka IOC ) மூலமாக வழங்கி வைக்கப்பட்டன.
முதற் கட்டமாக 25 நபர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் மொத்தமாக 160 மாற்றுத் திறனாளிகள் பயனடையவுள்ளனர்.
இதனை குறித்த இயலாமையுடையவர்களின் பெற்றார் ,உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். அரிசி,பால்மா உள்ளிட்ட அத்தியவசிய பொதிகள் அடங்கிய உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,லங்கா ஐ.ஓ.சி Lanka IOC) நிறுவன பிரதி தலைவர் B.ராஜேஷ், நிதி முகாமையாளர் ஏ.மன்மதன், உதவி முகாமையாளர் சன்ஜீவ குணசேகர, சந்தைப்படுத்தல் முகாமையாளர் விராஜ் சமரகோன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


