சம்மாந்துறையில் மக்கள் மீள குடியேற கொடுப்பனவு வழங்கி வைப்பு!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குடும்பங்கள் துப்பரவுப் பணிகளை மேற்கொண்டு மீள்குடியேறுவதற்கான கொடுப்பனவு நேற்று முன்தினம் (10) புதன்கிழமை அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் வழங்கி வைக்கப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான காசோலைகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.