–ஹஸ்பர் ஏ.எச்_
சீரற்ற கால நிலை மற்றும் திட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட வெருகல்,மூதூர்,ஈச்சலம்பற்று,சம்பூர் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கான உலர் உணவுப் பொதிகளை இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் அவர்களால் இன்று (09)உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
“உதிக்கும் திசை நோக்கிய உன்னத பயணத்தின் கீழ் சுமார் 400 உலர் உணவுப் பொதிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கி வைத்தார்.
இதில் மூதூர் பிரதேச சபை தவிசாளர்,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
—


