சத்துரகொண்டான் மக்களுக்கு அரசால் நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

நாடு பூராகவும் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான உரிய நிவாரண நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சத்துரகொண்டான் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு சர்வோதயம் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெட்ணம் அவர்களது ஏற்பாட்டில் இன்று (08) திகதி இடம்பெற்றது.

இதன்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 96 குடும்பங்களுக்கு 3000 பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், மேலும் இதன்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 68 குடும்பங்களுக்கு அவர்களது வீடுகளை புனரமைப்பு செய்வதற்கு ஒரு குடும்பத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கி வைத்ததுடன், குறித்த நிகழ்வில் மண்முனை வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி,சுபா சதாகரன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.