இணைந்த கரங்களினால் மூதூர் பிரதேசத்தில் உலர்உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

(ஹஸ்பர் ஏ.எச்)

திருகோணமலை மாவட்டத்தில் “இணைந்த கரங்களினால் ” வருடந்தோறும் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்குதல் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவி புரிதல் செயற்பாடுகளைச் செய்து வந்தாலும் தற்போது நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர்உணவுப் பொதிகளை கடந்த முதலாந்திகதி மூதூர் , பாரதிபுரம் பாரதி மகா வித்தியாலயத்தில் வைத்து 30 குடும்பங்களுக்கு வழங்கியிருந்தனர் .

மூதூர் பிரதேசத்தில் பல கிராமங்களில்உலர்உணவுப் பொதிகளை கடந்த முதலாந்திகதி வழங்கியதோடு இன்னும் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இளக்கந்தை கிராம மக்களுக்கு திங்கட்கிழமை (08) மூதூர் பாரதிபுரம் பாரதி மகா வித்தியாலய அதிபர் பு.ஜெயகாந்தன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய இணைந்த கரங்கள் அமைப்பினரால் அதிபர் பு.ஜெயகாந்தன் தலைமையில் உலர்உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது