ஹஸ்பர் ஏ.எச்_
———————
கிண்ணியாவில் நஞ்சற்ற உணவகத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (08) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
கிண்ணியா கட்டையாறு அபூபக்கர் MP வீதியில் அமைக்கப்பட்டிருந்த நஞ்சற்ற உணவகத்தை விரைவாக திறந்து பயன்பாட்டுக்கு வேண்டும் என்பதற்காக கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.மஹ்தி அவர்களால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன.
2019ம் ஆண்டில் தற்போதைய தவிசாளர் எம்.எம். மஹ்தி அவர்களால் முன்மொழியப்பட்டு 2021ம் ஆண்டில் கட்டி முடிக்கப் பட்ட இக்கட்டடத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவுற்ற நிலையில் நகரசபை கலைக்கப் பட்ட பின்னர் எந்தவொரு முன்னெடுப்பும் எடுக்கப் படாமல் கைவிடப் பட்டிருந்ததன.
நஞ்சற்ற உணவகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என மீண்டும் தவிசாளரால் முயற்சிகள் எடுக்கப் பட்டநிலையில் அதற்கான சுற்று மதிலையும் கழிப்பறை கூடத்தையும் அமைப்பதற்காக பிரதேச செயலாளரின் சிபாரிசுடன் கிண்ணியா சமுர்த்தி தலைமையகத்தினால் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டிருந்தது.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். கனி அவர்களின் தலைமையில் நடைபெற்ற கல் நடுவிழாவில் நகர சபையின் தவிசாளர் பிரதேச செயலாளர், பிரதேச சபை உறுப்பினர் ராபி, நகரசபை உறுப்பினர் ரஷாட் முகம்மட், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மனாப், சமுர்த்தி முகாமையாளர் என பலர் கலந்து கொண்டு கல்நட்டி வைத்தனர்.


