எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட தித்வா புயலின் தாக்கத்தினால் நாட்டில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் பொதுமக்கள், நலன்விரும்பிகள், விளையாட்டுக் கழகங்கள், ஆலயங்கள் மற்றும் பொது அமைப்புகளினால் சேகரிக்கப்படும் உலருணவு பொருட்கள் குறித்த அமைப்புக்களின் பிரதிநிதிகளால் பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கிளைகள் ரீதியாக தாங்கள் சேகரித்த உலருணவுப் பொருட்களையும் கையளித்து வருகின்றனர்.
இவ்வாறு சேகரிக்கப்படும் பொருட்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் பொதிசெய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு வழங்கும் நோக்கில் மாவட்ட செயலகத்துக்கு கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது


