மூதூர் பகுதி மக்களுக்கு குடி நீர் வழங்கி வைப்பு!

ஹஸ்பர் ஏ.எச்_

சீரற்ற கால நிலையால் ஏற்பட்ட பெரும் பாதிப்புக்களை மூதூர் பகுதியினர் எதிர்கொண்டனர். தற்போது வெள்ள நீர் வடிந்ததன் பின்பும் மக்கள் குடிநீரை பெற்றுக் கொள்வதில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில் தம்பலகாமம் பிரதேச செயலகம் ஊடாக குடி நீர் பவுசர் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு நேற்று (05)மூதூர் பகுதி மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க குடி நீர் பவுசர் மூவமாக சுமார் பத்தாயிரம் லீற்றர் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இரால் குழி,நடுத்தீவு உள்ளிட்ட மக்களுக்காக வழங்கி வைக்கப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் தலைமையிலான சக உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த பகுதிக்கு நேரடியாக சென்று குடி நீரை வழங்கினர்.

வெள்ள அனர்த்தம் காரணமாக மிக மோசமாக பாதிப்படைந்த மக்களின் தேவையாக குடி நீர் தட்டுப்பாடும் நிலவி வரும் நிலையில் குடி நீர் வழங்கப்பட்டுள்ளது.