எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் தலைமையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளிஸ்வரன் பங்கு பற்றுதலுடன் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்திற்கு பின்னரான நோய்த்தாக்கங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (05) புதிய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
மாவட்டத்தில் வெள்ள அனர்தங்களின் பின் டெங்கு மற்றும் எலிக்காச்சல் தோற்று பரவக்கூடிய சூழ்நிலை காணப்படுவதனால் அவற்றை தடுப்பதற்கான உயர் மட்ட கலந்துரையாடல் இடம் பெற்றது.
மேலும் பராமரிப்பற்ற நிலங்களில் காணப்படும் கொள்கலங்களில் தேங்கியிருக்கும் நீரினால் டெங்கு நோய் பரவும் சூழ்நிலை காணப்படுவதுடன் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் உரிய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொலிசார், துறை சார் நிபுணர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மாவடத்தில் வாழைச்சேனை மற்றும் கோறளைப்பற்று மத்தி போன்ற பிரதேசங்களில் டெங்கு நோய் அதிகமாக பரவும் பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் பொலிசாரின் உதவியுடன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


