டிட்வா பேரிடரால் மாயமான குடாவட்டை பிரதேச வயல்

( வி.ரி.சகாதேவராஜா)
அண்மையில் ஏற்பட்ட தித்வா பேரிடர் வெள்ளத்தினால் அம்பாறை மாவட்டத்தில் பல வீதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன. சில வீதிகள் அள்ளுண்டன.

அதேவேளை சம்மாந்துறை நாவிதன்வெளி பிரதேச வீரச்சோலை குடாவட்டை பிரதேச வயல் காணிகளுக்கான வீதிகள் வெகுவாக சேதமடைந்துள்ளன.
குறிப்பாக குடாவட்டை நடுக்கண்டத்தின் துருசுக்கு செல்லும் வீதியைக் காணவில்லை. நீர்ப்பாசன திணைக்களம் அண்மையில் இவ்வீதியை செப்பனிட்டது. ஆனால் தற்போது சேதமடைந்துள்ளது.
அதனால் விவசாயிகள் அவர்களது பாதிக்கப்பட்ட வயல் காணிகளுக்கு செல்லக்கூட முடியவில்லை. வீதிப் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இவ் வீதி மண்ணைத் தவிர்த்து கிறவல் இட்டு போடப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்முனைப் பிராந்திய நீர்ப்பாசனத் திணைக்களம் இவ் வீதியை புனரமைத்து விவசாயத்திற்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.