எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக அதிகாரிகளால் ஒவ்வொரு பௌர்ணமி தினங்களிலும் ஏற்பாடு செய்யப்படும் தர்ம போதனை நிகழ்வுத் தொடரின் மற்றுமொரு கட்டம் உந்துவப் போய தினத்தை முன்னிட்டு இன்று (04) கங்கொடவில வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ விஜயராம ரஜமஹா விகாரையில் இடம்பெற்றது.
ஸ்ரீ விஜயராம விகாரையின் விகாராதிபதி தர்மகீர்த்தி அமுனுமல்லே ஜினரதன தேரரின் வழிகாட்டலில், விஜயராம ரஜமஹா விகாரையைச் சேர்ந்த கோட்டே சீ.எம்.எஸ். ஶ்ரீ ஜயவர்தனபுர தேசிய பாடசாலையின் பௌத்தம மத போதகர் சங்கைக்குரிய ராஜகிரிய விபுலஞான தேரர் இன்றைய தர்ம போதனையை நிகழ்த்தினார். டித்வா சூறாவளி புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த எமது நாட்டு மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இங்கு நினைவேந்தல் நிகழ்வும் உயிர்நீத்தோரின் ஆத்மசாந்திக்காக வேண்டிய பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.
வலையொளி இணைப்பு-


