சண்முகம் தவசீலன்
2025.12.02
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று இலட்சம் பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய நாட்களில் பெய்த கனமழை மற்றும் காற்று காரணமாக பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்சுட்டான் பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு வழங்குவதற்காக பெரண்டினா நிறுவனத்தினால் 300000 ரூபா பெறுமதியான நிவாரணப்பொருட்கள் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக குறித்த நிவாரணப்பொருட்கள் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இ.நிசாந்தன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது
இந்த நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் ந.மயூரன் பெரண்டினா நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர், சோ.ஜெயச்சந்திரன் பெரண்டினா நிறுவனத்தின் இளைஞர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் ர.ஜதீஸ்வரன் பெரண்டினா நிறுவனத்தின்
வியாபார அபிவிருத்தி உத்தியோகத்தர் வே.நிவேதிகன்- ஆகியோர் கலந்துகொண்டார்கள்


