சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ஸகாத் வழங்கும் நிகழ்வு

(எம்.எஸ்.எம். ஸாகிர்)

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இவ்வாண்டின் (2025) இரண்டாம் கட்டமாக ஸகாத் வழங்கும் நிகழ்வு (30) சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல்
நம்பிக்கையாளர் சபைத் தலைவரும் பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் தலைவருமான அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாரக் தலைமையில், பைத்துஸ் ஸகாத் உதவித் தலைவர் மௌலவி ஐ.எல்.எம்.ரஃபி (ஹிழ்ரி)யின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் எஸார் மீராசாஹிப், உப தலைவர் டாக்டர் ஏ.எம். மிஸ்பாஹ், பிரதித்தலைவரும் பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் காப்பாளருமான எம்.எம்.எம். சலீம் (ஷர்க்கி), பிரதிப் பொருளாளர் எம்.ஐ.எம். நஜீம், சாய்ந்தமருது – மாளிகைக்காடு பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் செயலாளர் ஓய்வுபெற்ற மாநகர நிதி உதவியாளர் யூ.எல்.எம். ஜௌபர், பொருளாளர் ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர் யூ.எல்.எம்.ஹனீபா, கணக்கு பரிசோதகர் ஓய்வு பெற்ற கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அஷ்ரப், பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் உப செயலாளர் ஓய்வு பெற்ற சமூர்த்தி உத்தியோகத்தர் கே. ஆதம்பாவா, பைத்துஸ் ஸகாத் நிர்வாக சபை உறுப்பினர் எம்.சி.எம். அன்வர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை சாய்ந்தமருது – மாளிகைக்காடு கிளையின் செயலாளர் மௌலவி எம்.எச்.எம். நப்றாஸ், பைத்துஸ் ஸகாத் பணியக உத்தியோகத்தர் ஏ.ஏ.சமட் உட்பட பைத்துஸ் ஸகாத் உறுப்பினர்கள் மற்றும் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் வர்த்தக சங்க உறுப்பினர்கள், விவசாய பிரதிநிதிகள், கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட கல்விமான்கள், புத்திஜீவிகள், தனவந்தர்கள், ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், சாய்ந்தமருது – மாளிகைக்காட்டிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும்102 பயனாளிகளுக்கு இதன்போது பணமாகவும் தொழில் செய்வதற்கான உபகரணங்களும் நெல் மூடைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதன்போது மௌலவி அஷ்ஷேக் எம்.எம். கலாமுல்லாஹ் ஸகாத் பற்றி விசேட பயான் சொற்பொழிவு நிகழ்த்தியதோடு, அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாரக், எம்.எம்.எம். சலீம் (ஷர்க்கி), மௌலவி ஐ.எல்.எம்.ரஃபி (ஹிழ்ரி, யூ.எல்.எம்.ஹனீபா ஆகியோரும் இந் நிகழ்வில் உரையாற்றினர்.