ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தினார்.
இதன்படி அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் காணாமல் போனவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என தாம் நம்புவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசாங்கம் நிவாரணம் வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.
நீர், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் நிறுவ விரைவான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு மட்டுமே என ஜனாதிபதி கூறியுள்ளார்.


