( வி.ரி. சகாதேவராஜா)
கடந்த நான்கு நாட்களின் பின் அம்பாறை மாவட்டத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் முறையாக முறை மாற்று அடிப்படையில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
பிரதேச ரீதியாக மின்சாரம் ஒரு சில மணித்தியாலங்கள் மாற்றி மாற்றி வழங்கப்பட்டுவ வருகிறது.
இதனால் மக்கள் ஓரளவு மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
மின்சாரம் வந்தபின்தான் தொலைபேசிகள் இயங்கின. மக்கள் ஆறுதலடைந்தனர்.
நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக கடந்த நான்கு நாட்களாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் மின்சாரம் தடைபட்டிருந்தது.
மக்கள் சொல்லொணா கஷ்டங்களை எதிர்நோக்கினர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலநிலை சீராக இருந்தது.


