(அ . அச்சுதன்)
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை நகர் , லிங்கநகர் , லவ்லேன் உட்பட பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன இரவு இடம் பெற்ற கடும் மழை காற்றினால் மரங்கள் வீதிகளிலும், வீட்டின் மேல் பகுதிகளிலும் விமுந்து சேதம் ஏற்பட்டுள்ளது .
திருகோணமலை மாநகர சபையின் முதல்வர் க . செல்வராஜா (சுப்ரா) தலைமையில் , மாநகர ஆனையாளர் , உறுப்பினர்கள் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு , வேலைத்தளப்பிரிவு, சுகாதார பிரிவு ஆகிய குமுவினர்கள் தொடர்ந்தும் மரங்களை அகற்றும் பணியிலும் , மழைநீர் வடிந்தோடும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் மூதூர், வெருகல், கிண்ணியா, பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பல பகுதிகள் முமுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் நெய்தல் நகர், அக்கரைச்சேனை, பாலநகர், ஆலிம்நகர்,ஜாயா நகர், தக்வா நகர், ஹபிப் நகர், உட்பட பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மூதூர் கிழக்கில், சேனையூர், கட்டைபறிச்சான், கடற்கரைச்சேனை, சம்பூர், கூனித்தீவு, பள்ளிக்குடியிருப்பு பகுதிகலும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பல இடங்களில் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டுள்ளது.
குச்சவெளி பிரதேச சபையின் புல்மோட்டை உப அலுவலகப்பகுதிற்குட்பட்ட அறபாத்நகர், கைரியாநகர், ஜின்னாநகர், பீலியடி, தக்வாநகர், ரகுமான் நகர், சலாமியாநகர் மற்றும் ஏனைய பல இடங்களில் ஏற்பட்ட வெள்ள நீரினை அகற்றும் செயற்பாடுகள் குச்சவெளி பிரதேச சபையின் உப தவிசாளர் தலைமையில் குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் உறுப்பினர்களின் நேரடி பங்களிப்புடன் JCB இயந்திரத்தை கொண்டு வெள்ள நீர் அகற்றும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.


