வெள்ள அனர்த்தத்தினால் ஒன்பது பிரதேச செயலக பிரிவுகள் பாதிப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்பது பிரதேச செயலக பிரிவுகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு இன்று (27) தெரிவித்துள்ளது.

தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக 257 குடும்பங்களைச் சேர்ந்த 850 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 77 குடும்பங்களைச் சேர்ந்த 235 நபர்கள் இரண்டு இடைத்தங்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பலத்த காற்றினால் 167 வீடுகள் பகுதியவில் சேதமடைந்துள்ளன.

கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிரான் – புலிபாய்ந்தகல் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதுடன், பிரதேச செயலகத்தினூடாக Nபடகு சேவை ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி – மண்டூர் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதுடன்
பிரதேச செயலகத்தினூடாக உழவு இயந்திரம் மற்றும் லோறி சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் வவுணதீவு வலையறவு பாலத்தினூடான வெள்ள நீர் பெருக்கெடுத்தோடுவதனால் போக்கு வரத்து தடைப்பட்டுள்ளது அவசர போக்குவரத்திற்கான படகுசேவைகள் பிரதேச செயலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவானது அவசர அனர்தத செயற்பாடுகளுக்காக நேற்று (26) முதல் 24 மணி நேர சேவையில் இயங்குகின்றது. அவசர தொடர்புகளுக்கு 065-2227701 அல்லது 117 இலக்கத்தினை தொடர்பு கொள்ள முடியும்.