எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மற்றும் நுகர்வோர் ஆலோசனைக்குழுவின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு நுகர்வோர் ஆலோசனைக் குழுவிற்கு பிராந்திய நுகர்வோர் வலையமைப்பை நிறுவுதல் தொடர்பான நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (26) இடம் பெற்றது.
மாவட்டத்தில் பிராந்திய நுகர்வோர் வலையமைப்பினை அமைத்து நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கு அரச உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ளன.
இவ் உத்தியோகத்தர்களினால் ஒழுங்குமுறை முடிவெடுப்பதில் நுகர்வோருக்கான விழிப்புணர்வை வழங்கள் போன்ற செயற்பாட்டை மேற்கொள்ளவுள்ளன.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது மின்சார உரிமதாரர்களை நிர்வகித்தல் தொடர்பான விதிமுறைகள், குறியீடுகள், அறிக்கைகள், நடைமுறைகள், ஒழுங்குமுறை கருவிகளை உருவாக்கியுள்ளதுடன் வாடிக்கையாளர் சேவை வழிகாட்டுதல்கள் போன்ற சேவைகளை வழங்கி வருகின்றது.
இந் நிகழ்வில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நுகர்வோர் வெளிவிவகார பிரிவின் பணிப்பாளர் யசந்த ரத்துவிதான, பிரதி பணிப்பாளர் பரிசோதனைப்பிரிவு எஸ்.கிருஷானந்த், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நுகர்வோர் வெளிவிவகார பிரிவின் அலுவலர் எம். இசட்.எம் ரஹான், கிராம அலுவலர், சிறு தொழில் முயற்சி உத்தியோகத்தர்கள், சமூக சேவை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் நுகர்வோர்களின் பிரச்சினைகளை அதிகாரிகள் துரிதமாக தீர்த்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.


