குச்சவெளியில் ஒரே நாடு போதை ஒழிப்பு கலந்துரையாடல்!

ஹஸ்பர் ஏ.எச்_

திருகோணமலை குச்சவெளி அல்ஹூதா ஜூம் ஆ பள்ளிவாயலில் ஜனாதிபதியின் போதை ஒழிப்பு தொடர்பான ஒரே நாடு திட்ட கலந்துரையாடல் இடம் பெற்றது.

குச்சவெளி ஜாயா நகர் பல்லவக்குள குறித்த ஜும் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் குறித்த கலந்துரையாடலானது (25) நேற்று பள்ளிவாயலில் இடம் பெற்றது. குச்சவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் குச்சவெளி பிரதேச சபையின் உறுப்பினர் றகுமான் யூசூப் ,பள்ளிவாயல் நிருவாகிகள்,பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
போதை ஒழிப்புக்கான குழுவும் இதன் மூலம் உருவாக்கப்பட்டதுடன் இதற்காக பூரண ஒத்துழைப்பை பள்ளிவாயல் நிருவாகம் வழங்குவதாக பொலிஸ் பொருப்பதிகாரியிடம் தெரிவித்தனர். போதைப் பொருளை ஒழிக்க மக்களின் உதவி ஒத்தாசைகளும் தேவை எனவும் இதன் மூலம் போதையற்ற நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் முன்வர வேண்டும் என பொலிஸ் பொருப்பதிகாரி இதன் போது தெரிவித்தார்.
இளைஞர்களிடையே போதைப் பழக்கத்தை இல்லாமல் செய்வதன் மூலம் சிறந்த சமூகத்தை ஒரே நாடு என்ற திட்டம் மூலம் அதனை முன் கொண்டு செல்ல முடியும் எனவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதில் குறித்த பள்ளிவாயல் நிருவாக பிரிவுக்குட்பட்ட பொது மக்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.