சவளக்கடை கிட்டங்கி வீதியில் மீண்டும் வழிந்தோடும் நீர்!

பாறுக் ஷிஹான்

சவளக்கடை கிட்டங்கி வீதியில் மீண்டும் நீர் பரவி வடிந்தோட ஆரம்பித்துள்ளது

தொடர் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் பரவல் காரணமாக கிட்டங்கி வீதி இவ்வாறான நிலைமையை எதிர்கொண்டுள்ளது.

அப்பகுதியால் பயணம் செய்பவர்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல் பின்பற்றி செல்வதை அவதானிக்க முடிகின்றது.

கல்முனை, நாவிதன்வெளி பெரு நிலப்பரப்பையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதிக்கு மேலாக வெள்ளம் நீர் பரவுவதால் இன்று போக்குவரத்தில் ஈடுபடுபவர்கள் மிக அவதானத்துடன் செல்வதை காண முடிந்தது.

கல்முனை சேனைக்குடியிருப்பு நாவிதன்வெளி சவளக்கடை பிரதேசங்களை தரை வழியாக இணைக்கின்ற கிட்டங்கி பாலாமானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகரித்த ஆற்றின் நீர்மட்டம் காரணமாக இராணுவம் பொலிஸார் நாவிதன்வெளி பிரதேச செயலகம் பிரதேச சபை அனர்த்த முகாமைத்துவ குழு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களின் போக்குவரத்தை சீர் செய்திருந்தன.

மேலும் இவ் வீதிக்கான நிரந்தர பாலம் அமைக்குமாறு நீண்டகாலமாக பிரதேச மக்களினால் விடுக்கப்படும் கோரிக்கையை இதுவரைக்கும் எந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.