மட்டக்களப்பில் செயற்கை நுண்ணறிவு பயிற்சிநெறி செயலமர்வு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

விதாதா உத்தியோகத்தர்களுக்கான செயற்கை நுண்ணறிவு பயிற்சி நெறியானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் ஆலோசனை வழிகாட்டுதலின் கீழ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநிதன் தலைமையில் மாவட்ட விதாதா உத்தியோகத்தர் க. இலக்கணகுமார் ஒழுங்கமைப்பில் பழைய மாவட்ட செயலத்தில் இன்று (25) இடம் பெற்றது.

விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இயங்கும் விதாதா வள நிலையங்களில் பணிபுரியும் விதாதா உத்தியோகத்தர்களுக்காக இந்த பயிற்சி நெறி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த பயிற்சி நெறியின் வளவாளர்களாக கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் கணணி விஞ்ஞான பீடத்தின் விரிவுரையாளர்களான கே.கேதிகா மற்றும் ரி. தனுசியா ஆகியோர் கலந்து கொண்டு இப் பயிற்சி நெறியினை நடாத்தியிருந்தனர்.

செயற்கை நுண்ணறிவின் மூலன் முயற்சியாளர்களின் தொழில் மற்றும் வியாபாரத்தை நவீன தொழில் நுட்பத்தினூடாக மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் உத்தியோகத்தர்களுக்கு இதன் போது வழங்கப்பட்டன.

விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சானது விதாதா உத்தியோகத்தர்களுக்காக இவ்வாறான பல திறன் மேம்பாடு பயிற்சி நெறிகளை நாடளாவிய ரீதியில் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.