நூருல் ஹுதா உமர்
புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான கலை மற்றும் கலாச்சார போட்டி சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி. நௌஸாத்தின் நெறிப்படுத்தலில் (22) சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு, அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மட்டுமல்லாமல், சமூகத்தில் அவர்களின் திறன்களை வெளிக்கொணரும் அரிய மேடையாகவும் அமைந்தது.


