( வி.ரி.சகாதேவராஜா)
ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் தியாகி தோழர் க.பத்மநாபாவின் 74 வது அகவை தினம் (கார்த்திகை 19 ) பெரிய நீலாவணையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது .
இந் நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றதுடன் ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வு காரைதீவு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எஸ் .நேசராஜா தலைமையில் நடைபெற்றது .
நிகழ்வில் பத்மநாபா அறிவாற்றல் கழகத்தின் ஸ்தாபக தலைவர் தோழர் ஜோதி(சோலையூரான்) கலந்து கொண்டதுடன் சிறப்புரையும் வழங்கினார் .
மூத்த தோழர்களான பெர்னாண்டோ, சிராஃப் , நகுலன்,பாஸ்கரன்,கோபன்,வாசு மற்றும் வரதன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
அத்துடன் ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மாணவர்களும் கலந்துகொண்டனர்.
இன் நிகழ்வு தோழர் பத்மநாபா சேவை ஒன்றியத்தின் ஸ்தாபக தலைவர் தோழர் லவனின் வழிகாட்டல்களுக்கு அமைய சிறப்பான முறையில் நடைபெற்றது.புலம்பெயர் தோழர்கள் இவ் வைபவத்திற்ற்கான அனுசரணையினை வழங்கியிருந்தார்கள்.


