மட்டக்களப்பு மாநகர சபையின் ஆறாவது மாதாந்த சபை அமர்வு நேற்று இடம்பெற்றது !!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாநகர சபையின் 6வது மாதாந்த சபை அமர்வு இன்று 20.11.2025 திகதி வியாழக்கிழமை
காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து பி.ப 2.00 மணி வரை மாநகர சபை சபா மண்டபத்தில் இடம் பெற்றது.

மாநகர முதல்வரின் உத்தியோகபூர்வ வருகையின் பின்னர், மாநகர கீதம் இசைக்கப்பட்டதனைத் தொடர்ந்து கார்த்திகை மாதத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, சபை அமர்வின் கூட்டக் குறிப்பு, திருத்தங்களுடன் அங்கீகரிக்கப்பட்டு முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டதனைத் தொடர்ந்து சபை அமர்வு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் ஆரம்பமாகியது.

முதல்வரின் அறிவிப்புக்கள் அறிவிக்கப்பட்டு, மாநகர சபை ஊடாக நடைமுறைப்படுத்திய மற்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்குமான அனுமதிக்காக முதல்வரினால் முன்வைக்கப்பட்ட நிலையில் சபையோரினால் அனுமதி வழங்கப்பட்டது.

அதன் பிற்பாடு முதல்வரின் முன்மொழிவுகள்
நிதிக்குழு அங்கீகாரம் தொடர்பாகவும், மாநகர சபை பிரிவில் பல வீதியோர வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும் அதனை தடுப்பதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் முதல்வரினால் தெரிவிக்கப்பட்டது.

மாநகர சபை கட்டளைச்சட்டத்திற்கு அமைவாக மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்ட விடையங்களுக்கான நிதி விடையங்கள் சபை தழுவல் அனுமதியை எதிர்பார்த்து தீர்த்த விடையங்களுக்கான அனுமதி கோரல் தொடர்பாக சபை அனுமதிக்காக முன்வைக்கப்பட்ட விடையங்கள் சபையில் முன் வைக்கப்பட்ட போது சபை அனுமதி வழங்கப்பட்டது.

குழுநிலை விவாதத்திற்கு சபை மாற்றப்பட்டு சில விடையங்களுக்கான தெளிவுகள் மாநகர ஆணையாளரினால் உறிப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.

வட்டார ரீதியாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள், மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பொலிசாரினால் அறவிடப்படும் தண்டப்பணம் காத்தான்குடி நகரசபைக்கு நீதி மன்றத்தினால் வழங்கப்படுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதுடன், பல விடையங்களுக்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டதுடன், திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டது எதிர்க்கட்சியினின் ஒரு இனவாத செயற்பாடு என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட கருத்தினை அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.