தேசிய மட்ட அறிவுக் களஞ்சியம் மீண்டும் ஆரம்பம்!

(எம்.எஸ்.எம். ஸாகிர்)

இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தாபன முஸ்லிம் சேவையில் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் “அறிவுக்களஞ்சியம்” வானொலி நிகழ்ச்சியின் ஐந்தாவது தேசிய மட்டத்திலான போட்டி நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் முதலாவது ஒலிப்பதிவு இம்மாதம் பதினைந்தாம் திகதி கொழும்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கிடையிலான போட்டி நிகழ்ச்சியாக நடைபெறவுள்ளது. கொழும்பு – 09, இஸ்லாமிக் புக் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், கொழும்பு மாவட்டத்திலுள்ள 15 பாடசாலைகள் கலந்து கொள்ளவுள்ளன.

இறுதியாக நடைபெற்ற தேசிய மட்டத்திலான போட்டியில் வாழைச்சேனை அந்நூர் முஸ்லிம் மகா வித்தியாலயம் தேசிய மட்டத்திலான முதலாவது இடத்தைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.