எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
நீதிமற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின்கீழ் புதிதாக பதிவுசெய்யப்பட்டு சங்கங்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேசசெயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் தலைமையில் பிரதேச செயலகத்தில் இன்று (10) நடைபெற்றது.
மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட 15 கிராமிய சகவாழ்வு சங்கங்கள் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வு ஒருங்கிணைவு மற்றும் பிரச்சாரம் விழிப்புணர்வு மத்தியஸ்தம் தொடர்பான கடமைகளை கிராமிய மட்டத்தில் செயற்படுதல் என்னும் நோக்கில் கோயில் குளம், ஒல்லிக்குளம், ஆரையம்பதி மேற்கு, கிரான்குளம் வடக்கு மற்றும் மத்தி, மாவிலங்கதுறை, புதுக்குடியிருப்பு வடக்கு மற்றும் தெற்கு, செல்வாநகர், கிரான்குளம், ஆரையம்பதி-01, – 02, கிழக்கு மற்றும் தெற்கு, மண்முணை மற்றும் கிரான்குளம் ஆகிய
கிராமங்களுக்கான கிராமிய சகவாழ்வு சங்கங்கள் இவ்வாறு பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டது
இந்நிகழ்வில் பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகள், தேசிய ஒருமைப்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


