கத்தாரில் நடைபெற்ற மாவனல்லை பிரீமியர் லீக் சீசன் 2 கிரிக்கெட் சுற்றுப்போட்டி

ஜே.எம்.பாஸித் – கத்தார்

கத்தார் வாழ் இலங்கை மாவனல்லை பிரதேச இளைஞர்களுக்கிடையே நடைபெற்ற 8 அணிகள் கொண்ட மாவனல்லை பிரீமியர் லீக் (MPL) சீசன் 2 கிரிக்கெட் சுற்றுப்போட்டி நவம்பர் 7 ஆம் திகதி க்ரீக் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

சுற்றுப்போட்டியில் வெஸ்ட் பே வோரியர்ஸ் அணி வாக்ரா ராயல்ஸ் அணியை பத்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மேலும், வெஸ்ட் பே வோரியர்ஸ் அணியின் ரஷான் முகமது ஆட்ட நாயகன் விருதை வென்றார்.