இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

இன்று நவம்பர் 10ம் திகதி ஊவா, தெற்கு, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வாநிலை அவதான நிலையம் அறிவித்ததுள்ளது.

இன்று அதிகாலை 05:30 மணிக்கு வானிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்ட தகவலுக்கமைவாக, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.