மழைவீழ்ச்சி மற்றும் நீர்மட்டத் தகவல்களை உரிய நேரத்தில் அறிந்து கொள்ள!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

பருவப்பெயர்ச்சி மழையினால் நீர்த்தேக்கங்களில் ஏற்படும் நீர் மட்ட உயர்வு மற்றும் வெள்ள அபாயம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள நீர்ப்பாசனத் திணைக்களம் இணைய வசதியினை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கமைவாக மாதுறுஓயா, முன்தெனி ஆறு, மகிழவட்டுவான் ஆறு, ஆந்தெல்ல ஓயா போன்றவற்றின் தகவல்களைப் பெற்றுக் கொள்ள QR கோட் வசதிகளை வழங்கப்பட்டுள்ளது.

இதன்விளைவாக பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், உரிய நேரத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், குடும்ப உறவுகள், சொத்துக்கள் மற்றும் வாழ்வாதாரத்தினைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் வசதியாக உள்ளது.

இதுதவிர www.rivernet.lk என்ற இணையத்தளத்தினூடாகவும் இத்தகவல்களைப் பெற்றுக் கொள்ளமுடியுயம் என மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசனத் திணைக்கள பிரதம பொறியியலாளர் எம்.எஸ். றிப்னாஸ் கடந்த 30ம் திகதி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பருவப் பெயர்ச்சி மழைத் தாக்கத்திற்கான முன்னெச்சரிக்கை தயார்படுத்தல் கூட்டத்தில் தெழிவுபடுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.