எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
இன்று (06) பி.ப. 1430 மணிக்கு வானிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்ட வானிலை எதிர்வு கூறல்
உவா மாகாணத்திலும். அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீட்டர் அளவிற்கு மிதமான அல்லது கனமழை பெய்யக்கூடும்.
இடி மின்னலுடன் கூடிய மழை நேரங்களில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் சேதங்களை குறைக்கஇ பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதேபோல் கடல்பகுதிகளில் சில சமயங்களில் சிலாபம் முதல் பொத்துவில் வரை (கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை வழியாக) விரிந்த கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 தொடக்கம் 60 கிமீ வரை அதிகரிக்கக்கூடும்.
அதேபோல்இ அந்த கடற்பகுதிகளில் அலை உயரம் சுமார் 2.0 முதல் 2.5 மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும். குறிப்பிடப்பட்ட கடற்கரைப் பகுதிகளுக்கு அருகில் அலைகளின் வீச்சால் கடல் நீர் மேலே எழ வாய்ப்பு உள்ளது.


