எம்.பி. அர்ச்சுனாவின் ZOOM உரையைக் கேட்டு சபை சிரிப்பில் மூழ்கியது.

எம்.பி.க்களின் பாதுகாப்பு குறித்து ஜூம் தொழில்நுட்பம் மூலம் விவாதிக்க சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எம்.பி. அர்ச்சுனா ராமநாதன் கலந்து கொண்டார்.

கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே, சபாநாயகர் எம்.பி. ராமநாதனை உரையாடலில் ஈடுபடுத்தினார். “சபாநாயகரே, என் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. அது யாரிடமிருந்தும் இல்லை. இந்த அரசாங்கம், காவல்துறை மற்றும் சபாநாயகரால் நான் அச்சுறுத்தப்படுகிறேன்,” அர்ச்சுனா சத்தமாகத் தொடர்ந்தார்.

தனது உரையால் முழு சபையும் சிரிப்புக் கடலாக மாற அதிக நேரம் எடுக்கவில்லை. இந்த நேரத்தில் குரல் எழுப்பிய சபாநாயகர், “மிஸ்டர் அர்ச்சுனா, என்னிடமிருந்து உங்களுக்கு என்ன அச்சுறுத்தல்? எனக்குத் தெரிந்தவரை, நான் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் செய்யவில்லை” என்று சத்தமாகச் சிரித்துக் கொண்டே கூறினார்.

 “சபாநாயகரே, நீங்கள் எனக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். நான் சபையில் இருக்கும்போது நீங்கள் எப்போதும் என் மைக்கை அணைத்துவிடுவீர்கள். நீங்கள் என்னைப் பேச விடுவதில்லை. அதுதான் உங்களிடமிருந்து எனக்கு இருக்கும் அச்சுறுத்தல். அதனால்தான் நான் அதைச் சொல்ல ஜெனீவா வந்துள்ளேன்.” அர்ச்சுனா இதைச் சொன்னதும், அனைவரும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு மீண்டும் சிரித்தனர்.

எம்.பி. பாதுகாப்பு குறித்த விவாதம் தீவிரமாகிக் கொண்டிருந்த நேரத்தில், அர்ச்சுனாவின் பேச்சு அனைவருக்கும் ஓரளவு நிம்மதியைத் தந்ததாக ஒரு சில எம்.பி.க்கள்  தெரிவித்துள்ளனர். இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தனது முகப்புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பினை தன்னிச்சையாக பின்வாங்கி இருக்கிறது.
இது தொடர்பாக இன்றைய தினம் போலீஸ் ம அதிபர் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் அது தவிரவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நடைபெற்ற போது ஐரோப்பாவில் இருந்து Zoom மூலம் தொடர்பு கொண்டேன்.
இதன் போது தற்போதைய நிலையில் ஒரு வைத்தியராக எனக்கு போதை வஸ்து கடத்தல் காரர்கள் மற்றும் பாதாள உலகம் குழுக்களில் இருந்து உயிராபத்து வராது என்பதை தெளிவாக தெரிவித்து இருந்தேன்.
தற்போதைய நிலையில் எனது உயிருக்கு பங்கம் விளைவிக்க முனைவது அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் போலீசார் என்பதை பாராளுமன்ற சபாநாயகர் இடம் தெரிவித்த போது பாராளுமன்ற சபாநாயகர் இது ஒரு நான்சென்ஸ் ஸ்டாக் (This is a nonsense talk”) என்று நேரடியாக தெரிவித்திருந்தார்.
தமிழருக்கு நடைபெற்ற இனப்படுகொலை என்பதை ஏற்றுக் கொள்ளாத அனுரகுமாரசதிநாயக்க அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையில் நான் கொண்டு வரவிருக்கும் இனப்படுகொலை தொடர்பான வழக்கினை பாரதூரமாக பார்க்கிறது.
தனி ஒருவனாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்தது என்பதை இன்னும் ஒரிரு நாட்களில் பதிவு செய்கிறேன்.
இதனை பதிவு செய்த பின்னர் இலங்கைக்கு நான் வருகின்ற போது ஐக்கிய நாடுகள் சபையான சாட்சியாக இருந்தும் எனக்கு உயிர் ஆபத்து உயிரச்சுறுத்தல் ஏற்படப்படுவது தற்போதைய அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சபாநாயகர் அது தவிரவும் அரசாங்கத்தின் கைக்கூலியாக செயல்படுகின்ற போலீசார் ஆகியோரால் மட்டுமே ஒழிய எனக்கு எந்த பாதாள உலக குழுக்களுடனும் தொடர்பு என்று அல்லது போதை வஸ்து கடத்த காரர்களுடன் தொடர்பு என்றும் சித்தரிக்க முடியாது.
இந்த விடயத்தை கதைத்த போது சபாநாயகர் எனது Zoom மூலமாக இணைப்பை துண்டித்தது மட்டுமல்லாமல் தொடர்ந்தும் பேச அனுமதிக்கவில்லை.
போலீசார் பாதுகாப்பு தராத சந்தர்ப்பங்களில் என்னுடைய சுய பாதுகாப்பிற்காக ஆபத்து அற்ற பாதுகாப்பு கருவிகளை வைத்திருப்பதற்காக நான் கேட்ட கடிதத்திற்கு கூட சபாநாயகர் அது தொடர்பான அமைச்சரிடம் அதனை கேட்க சொல்லி கடிதம் அனுப்பி இருந்தும் அதனை பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால அவர்களிடம் தொலைபேசியில் அழைப்பெடுத்து கேட்ட போது அந்த கடிதத்தை பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியதாக கூறிய போதும் இதுவரை கடிதத்துக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இவ்வாறான நிலைமையிலும் கூட நான் என் சொந்த மண்ணுக்கு திரும்பி வருவது என் மக்களுக்காக நான் செய்யக்கூடிய எனது கடைசி கடமையாக நான் கருதுகிறேன்.
எனது உயிருக்கு ஏதாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு 100% பொறுப்பு பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபர் என்பதை மிகத் தெளிவாக பொதுமக்களுக்காக இங்கே பதிவிட விரும்புகிறேன்.
இந்த முகப்புத்தகம் எனது ஒபிஷியல் முகப்புத்தகமாக இருக்கின்ற காரணங்களினால் சமூக ஊடகங்களுக்கான நேரடியான எனது அறிவித்தல் இதுவாகும் என்பதில் நான் ஆழமான கரிசனை கொண்டுள்ளேன்.
எது எப்படியோ,
ஈழத்திலிருந்து ஒருவன் ஆவது 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி வரை ஒரு இனம் அழிக்கப்பட்டது என்பதை சர்வதேசத்திற்கு முதன் முதலாக எழுத்து மூலமாக சத்தியகடதாசி மூலமாக இன்னும் இரண்டு நாட்களில் சமர்ப்பிக்க இருக்கிறேன்.
நடப்பது நடக்கட்டும்..
பயந்த இனம் அல்ல!
பயம் காட்டிய இனம் காட்டிக் கொண்டிருக்கின்ற இனம் நாம் என்பதை வரலாறு சொல்லட்டும்!
இப்படிக்கு
பாராளுமன்ற உறுப்பினர்
இராமநாதன் அர்ச்சுனா