பாரம்பரிய உணவினை ஊக்குவித்தல் மற்றும் போசனை மேம்படுத்தல் திட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பில் இடம்பெற்றது!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

பாரம்பரிய உணவினை ஊக்குவித்தல் மற்றும் போசாக்கு ஊக்குவிப்புத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு, மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி தலைமையில் நேற்று (29) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

சுதேச வைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், நிருவாக உத்தியோகத்தர், சமூக நல வைத்தியர் டி. தனூஜா, சுதேச வைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய உணவுகளை ஊக்குவிப்பதன் மூலம் போசாக்கு மட்டம் மேம்படுத்தப்படும் என்பதோடு பல தொற்றா நோய்கள் வராமல் தடுக்கலாம் போன்ற பல அறிவார்ந்த விடயங்கள் இக் கருத்தரங்கில் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.