ஈழத்தமிழர்களுக்காக சுவிஸ் SP கட்சியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம்.

சுவிட்சர்லாந்தின்   சோசலிஸ ஜனநாயகக் கட்சி (SP Switzerland) தனது கட்சிக் கூட்டத்தில் இலங்கையின் நிலைமைக்குறித்து ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.

இத்தீர்மானம், ஈழத் தமிழர்கள்மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட வன்முறை, வெகுஜனக் கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை கடுமையாகக் கண்டித்து, அந்தச் செயல்கள் 1948 ஐ.நா. இனஅழிப்பு ஒப்பந்தத்தின் கீழ் இனஅழிப்பாகத் தகுதிபெறுகின்றனவா என்பதை சர்வதேச அளவில் ஆய்வு செய்ய சுவிஸ் அரசை கேட்டுக்கொள்கிறது

25 அக்டோபர் 2025,  அன்று லூசெர்ன் மாநிலம் சூசை எனுமிடத்தில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்திலேயே இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும்,

 சுவிஸ்சோசலிஸ ஜனநாயகக் கட்சி கட்சியின் கோரிக்கைகள்

  1. இலங்கையில் தமிழர்கள்மீது நடந்த வன்முறை, கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களைசுவிஸ்சோசலிஸ ஜனநாயகக் கட்சி  கடுமையாகக் கண்டிக்கிறது.
    இந்தச் செயல்கள் 1948 ஐ.நா. இனஅழிப்பு ஒப்பந்தத்தின் கீழ் இனஅழிப்பு எனப் பொருள்படும் என ஆய்வு செய்ய சுவிஸ் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  2. சுவிஸ் அரசு இலங்கையில் நடந்த போர் குற்றங்களுக்கு சுயாதீன சர்வதேச விசாரணை நடத்த ஐ.நா. மற்றும் சர்வதேச நீதிமன்றத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.
  3. சுவிஸ் வெளியுறவு கொள்கை மனித உரிமைகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும்; போர் குற்றங்களில் ஈடுபட்ட நிறுவனங்களுடன் எந்தவொரு ஒத்துழைப்பும் இருக்கக் கூடாது.
  4. சுவிஸ் அரசு சுவிஸில் வாழும் தமிழ் சமூகத்துடன் இணைந்து செயல்பட்டு, அவர்கள் நீதி மற்றும் மனித உரிமைக்காக நடத்தும் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்.
  5. மே 18 ஆம் தேதி நடைபெறும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள் எந்தவிதத் தடையும் இன்றி நடைபெற வேண்டும்.
  6. தமிழ் அகதிகள் சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும்.
    இலங்கையில் பாதுகாப்பும் நீதியும் உறுதி செய்யப்படாத வரை அவர்களை திருப்பி அனுப்பக் கூடாது.

இந்தத் தீர்மானம் கட்சியின் துணைக குழுவால் முன்மொழியப்பட்டது.
மூன்று சுவிஸ்-தமிழ் அரசியல்வாதிகள் — அதுஷன் தவராஜசிங்கம், தீபிகா சண்முகராசா கிருஷ்ணதாஸன், சந்துரு சோமசுந்தரம் — தீர்மானத்தை கூட்டத்தில் வழங்கினர்.

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின், இதன் தொடக்க முயற்சியாளர்களில் ஒருவரும்  கட்சியின் Aargau  மாநிலஇணைத் தலைவருமான தீபிகா சண்முகராசா கிருஷ்ணதாஸன்  கருத்து தெரிவிக்கையில் இந்தத் தீர்மானம் ஒரு அரசியல் ஆவணம் மட்டும் அல்ல;தங்கள் குழந்தைகளை இழந்த தாய்மார்களுக்கு அளிக்கப்படும் வாக்குறுதி.
16 ஆண்டுகளாக நீதி காத்திருக்கும் குடும்பங்களுக்கு ஒரு நம்பிக்கை.
குரல் அடக்கப்பட்டவர்களுக்கும், இன்னும் நம்பிக்கை இழக்காதவர்களுக்கும் இது ஒரு நம்பிக்கைச் செய்தி.
ஈழத் தமிழர்கள்மீது நடந்த மனித உரிமை மீறல்கள் மறக்கப்படக்கூடாது.
நடந்தது ஒரு தற்செயல் அல்ல — திட்டமிட்ட, தயாரிக்கப்பட்ட, செயல்படுத்தப்பட்ட குற்றம்.உலகம் அப்போது கண்களை மூடியது.
ஆனால் இன்று, நாம் இனி கண்களை மூடுவதில்லை.
இந்த தீர்மானத்தை ஒருமனதாக ஏற்றதன் மூலம், சுவிஸ் சோவலிச ஜனநாயகக் கட்சி (SP) ஒரு தெளிவான செய்தியை சொல்லியுள்ளது. அச்செய்திநாங்கள் அநீதியை வெளிச்சமிடுகிறோம்.பாதிக்கப்பட்டோரின் பக்கம் நிற்கிறோம்.
நீதி தாமதிக்கக்கூடாது; உண்மை மறைக்கப்படக்கூடாது. என்றார்.

சந்த்ரு சோமசுந்தரம், மற்றொரு தொடக்க முயற்சியாளர் மற்றும் SP Stadt Bern இணைத் தலைவர் சந்த்ரு சோமசுந்தரம்  தனது உரையில் இந்தத் தீர்மானத்தின் மூலம், சுவிஸ்சோசலிஸ ஜனநாயகக் கட்சி  தமிழர்களுடனான தனது ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. அது அவர்களுக்குச் சொல்கிறது: உங்கள் வலி கண்ணுக்குத் தெரியாதது அல்ல, உங்கள் கதையும் சுவிட்சர்லாந்தின் வரலாற்றின் ஒரு பகுதியாகும். சுவிஸ்சோசலிஸ ஜனநாயகக் கட்சி  உங்கள் பக்கம் உறுதியாக நிற்கிறது. ஏனென்றால் மனித உரிமைகள் பேரம் பேச முடியாதவை, நீதி காலாவதியாகாது!” என்றார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் தொடர்ச்சியான பயன்பாடு, தண்டனையிலிருந்து தப்பிக்கும் கலாச்சாரம் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் அவலநிலை ஆகியவற்றை மேற்கோள் காட்டி, இலங்கையில் தற்போதைய மனித உரிமைகள் நிலைமையை அதுஷான் தவராஜசிங்கம் மாநாட்டிற்கு நினைவூட்டினார்.

சுவிஸ்சோசலிஸ ஜனநாயகக் கட்சி  (SP Switzerland) என்பது நாட்டின் பழமையானதும் முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும்.
இது தேசிய, மாநில (cantonal), மற்றும் நகர்மட்ட அரசியல் அமைப்புகளில் வலுவான பங்கு வகிக்கிறது.
தற்போது சுவிஸ் அரசாங்கமான ஃபெடரல் கவுன்சிலில் இரண்டு அமைச்சர்கள் SP கட்சியிலிருந்து உள்ளனர்.

SP கட்சி சமூக நீதி, சமத்துவம், ஒற்றுமை, மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இது சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய கட்சியாகும் மேலும் 35,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

2025 அக்டோபர் 25 அன்று லூசெர்ன் மாநிலத்தின் சூசையில் நடைபெற்ற கட்சிக் கூட்டம் SP-இன் அதிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பு ஆகும் —
இங்கு நாடு முழுவதிலுமிருந்து பிரதிநிதிகள் வந்து கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் தீர்மானங்களை முடிவு செய்கிறார்கள்.

கடந்த ஆண்டுகளிலும் SP பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் இனஅழிப்பு நினைவு நாளை (May 18 Mullivaikkal) நினைவு கூறி, சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

கட்சியின் தீர்மானம் ஜேர்மன்மொழியில்

Resolution-zur-Situation-in-Sri-Lanka