மட்டக்களப்பில் கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பில் அடிப்படை சான்றிதழ்கள் கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் தலைமையில் கிழக்கு மாகாண பிராந்திய இந்து கலாசார நிலையத்தில் இன்று (26) இடம் பெற்றன .

பாரம்பரிய முறைப்படி மங்கள விளக்கேற்றி இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியன நிகழ்வில் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்னமிஷன் முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா மகராஜ், மற்றும்
பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ்.அருள்ராஜ் கலந்து சிறப்பித்தனர்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் நாவற்குடா இந்து கலாசார கிழக்கு பிராந்திய அலுவலகம் இணைந்து நடத்தும் அடிப்படை கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டன.

மாணவர்களின் ஆற்றல் மட்டும் ஆளுமைகளை மேம்படுத்துவதற்கு பாரம்பரிய கலைகள் பண்ணிசை, பரதநாட்டியம், யோகாசனம், வயலின் போன்ற கலைகளை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது கருத்து தெரிவித்த சுவாமி நீலமாதவானந்தா மகராஜ் மாணவர்களிடையே நல்ஒழுக்க விழுமியத்தை மேம்படுத்துவதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் மண்முனை வடக்கு . -பிரதேச செயலாளர் திருமதி. சிவபிரியா வில்வரெட்ணம், இந்து கலாசார கிழக்கு பிராந்திய அலுவலக உத்தியோகத்தர் ஜே.சதேஷா, இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது கற்கைகளை பூர்த்தி செய்த மாணவர்களின் ஆக்கங்கள் அரங்கேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.