கொட்டும் மழையிலும் 34 ஆவது நாளாக தொடரும் முத்து நகர் விவசாயிகளின் போராட்டம்!

ஹஸ்பர் ஏ.எச்_

தொடராக ஓய்வின்றி கொட்டும் மழையில் 34 ஆவது நாளாக சத்தியக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எங்களை தனியார் தமிழ் செய்தி பிரிவு ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரதமர் அலுவலக செயலாளரின் மாற்றுக் கருத்து பெரும் கவலையளிக்கிறது என முத்து நகர் ஒன்றினைந்த விவசாய சம்மேளன செயலாளர் சஹீலா சபூர்தீன் தெரிவித்தார்.
தனியார் ஊடகமொன்றின் தமிழ் செய்தி பிரிவு வானொலிக்கு தொலைபேசி ஊடாக நேற்றுமுன்தினம் (19)வழங்கிய பிரதமர் செயலக செயலாளர் கருத்து தொடர்பில் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

முத்து நகர் விவசாயிகள் நேற்றுடன் (20) 34 ஆவது நாளாக திருகோணமலையில் தொடர் சத்தியாக் கிரக போராட்டத்தை தங்களது விவசாய நிலம் அபகரிக்கப்பட்டு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக வழங்கப்பட்டுள்ளது இதனை கண்டித்து கவனயீர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்
நாங்கள் பிரதமரை நேரில் சந்தித்து கொழும்பில் உரையாடினோம் அகில இலங்கை விவசாய சம்மேளன செயலாளரும் உடனிருந்தார். விவசாயிகளின் பிரச்சினைகளை நேரில் சந்தித்து பிரதமரின் செயலாளர் ஆராய வேண்டும். திருகோணமலைக்கு அண்மைய விஜயத்தின் போது எங்களுடன் பேசவில்லை உயரதிகாரிகளுடன் பேசி விட்டு தான் எங்கள் மூவரை அன்று மாலை 4 மணிக்கு அழைத்தார்கள். எங்களுடன் பேசாமல் அங்குள்ள ரொசான் எம்.பியுடன் தான் பேசினார்.வீதியோர போராட்டத்தில் ஈடுபட்டோம் அந்த தருணம். விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு தருவதாக கூறினார் இதனை ரொசான் எம்.பி மொழி பெயர்த்தார். அவர்களுடைய முடிவை தெரிவித்தார்.எங்களுடன் பேசவில்லை. உண்மை தன்மையை இவர்கள் உப்புவெளி கமநல சேவைகள் திணைக்களம் ஊடாக எமது விவசாயிகளின் விபரங்களை பெறலாம். அப்பட்டமான கதைகளை கூற வேண்டாம். தனிப்பட்ட பிரச்சினை அப்படி இப்படி என கூறும் செயலாளரின் கருத்து கவலையளிக்கிறது. மூன்று சம்மேளன விவசாயிகள் சூழற்சி முறையில் போராடி வருகிறோம். விவசாயிகளின் 352 குடும்பங்களுக்கும் தீர்வினை சரியாக வழங்க வேண்டும். ஊழல் அற்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்பதற்கு எங்களது ஒத்துழைப்பு இருக்கும். கொழும்பில் இருந்து விவசாய பசளை அதற்கான பணத்தை செலுத்தும் நீங்கள் மாற்று கருத்து வெளியிடுவதை ஏற்க முடியாது. விவசாயிகளை விற்க ஒரு வகை நாடக பாணியில் சிலர் கையூட்டலை செய்துள்ளார்கள். நகர அபிவிருத்தி ,கமநல சேவைகள் திணைக்களம் ஊடாக உண்மை தன்மையை நீங்கள் பெறலாம். உண்மையில் இலஞ்ச ஊழல் அற்ற அதிகாரியாக இருந்தால் உண்மை தன்மையுடன் செயற்படுங்கள். மூன்று சம்மேளன பிரதிநிதிகளை கொழும்புக்கு பிரதமர் காரியாலயத்துக்கு அழையுங்கள் ஆதாரங்களுடனும் ஆவணத்துடனும் வருகிறோம் என பிரதமர் அலுவலக செயலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.