எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தேசிய விருது வழங்கும் நிகழ்வு சமூக பாதுகாப்பு சபையின் ஏற்பாட்டில் திருகோணமலை JKAB Beach Resort மாநாட்டு மண்டபத்தில் நேற்று (16) இடம்பெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச செயலகம், இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளை உள்ளீர்த்து 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய மட்ட அடைவை அடைந்தமைக்காக பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன், உதவிப் பிரதேச செயலாளர் வி.துலாஞ்சனன் மற்றும் சமூக ஓய்வூதிய திட்ட விடய உத்தியோகத்தர் உள்ளிட்டோர் சான்றிதழ், பதக்கம் மற்றும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் இலங்கை சமூக பாதுகாப்பு சபை தவிசாளர் எம். கே. பி. திசாநாயக்க, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே. எஸ். அருள்ராஜ், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் திருமதி ஜே. ஜே. முரளிதரன் மற்றும் உயர் மட்ட அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.


