(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
மௌலி ஷோதோகான் கராத்தே சங்கத்தின் ஒன்பதாவது திறந்த சர்வதேச கராத்தே சம்பியன்ஷிப் போட்டி (9th Open International Karate Championship) கடந்த (11) சனிக்கிழமை நிட்டம்புவவில் நடைபெற்றது.
இதன்போது சொடோகான் கராத்தே Kumite போட்டியில் எம்.எம்.றிக்காஸ், முதலாமிடமும் Kata போட்டியில் மூன்றாமிடமும் பெற்று சம்பியனாகத் தெரிவாகி, சான்றிதழுடன்
வெற்றிக்கிண்ணத்தையும் சுவீகரித்துக் கொண்டார்.
இலங்கை கராத்தே கூட்டமைப்பின் கிழக்கு மாகாணத்தின் தலைவரும் கராத்தே பயிற்றுவிப்பாளருமான சிஹான் முஹம்மத் இக்பால் ஆசிரியரின் மாணவரான எம்.எம். றிக்காஸ் வெற்றிக்கிண்ணம் மற்றும் சான்றிதழ்களுடன் தனது ஆசிரியருடன் காணப்படுகிறார்.


