( வி.ரி.சகாதேவராஜா)
முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 38 ஆம் ஆண்டுநினைவு நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் இலண்டன் வடமேற்கு பகுதியில் நினைவு கூரப்பட்டது. .
இந்த உணர்வு பூர்வமான நிகழ்வு (11) சனிக்கிழமை இரவு, வடமேற்கு இலண்டன் பகுதியில் ( Grantview Banqueting Hall ,10 Stonefield way, Ruislip, HA4 0JS) நடைபெற்றது.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நினைவு கூரப்பட்ட இந் நிகழ்வில் பெருந்திரளான உணர்வாளர்கள் வரிசையாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன் “சூரியபுதல்விகள்” பாகம் 02 பாடல் வெளியீட்டு விழாவும் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன.


