சிரேஷ்ட ஊடகவியலாளர், கவிஞர் ரீ.எல்.ஜவ்பர்கான்க்கு “பல்துறை வித்தகர்” விருது

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வழங்கும் கிழக்கு மாகாணத்தின் உயரிய விருதான பல்துறை வித்தகர் விருதினைப் பெற்றார் சிரேஷ்ட ஊகடவியலாளரும், தேசி சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞருமான கவிமாமணி ரீ.எல்.ஜவ்பர்கான்.

தமது வாழ் நாளில் கலை இலக்கிய,ஊடகத்துறைக்கு ஆற்றிய பெரும் பணிக்காக ஐம்பது வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு வழங்கப்படும் இவ் உயரிய விருது கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த நாற்பத்தி மூன்று வருடங்களாக தொடர்ந்து எழுதிவரும் கவிஞர் ஜவ்பர்கான் கவிஞராக, சிறுகதையாசிரியராக, நாடக எழுத்தாளராக,சிரேஷ்ட ஊடகவியலாளராக,யூடியூப்பராக, பேச்சாளராக இலக்கியம்,ஊடகம்,அரசியல், பொதுப்பணி என பல்வேறு தளங்களில்
தொடர்ச்சியாக இயங்கிவரும் ஜவ்பர்கான் இதுவரை ஏழு நூல்களை வெளியிட்டுள்ளார்.இதில் “மௌன தேசம்” மரபுக் கவிதை நூல் தேசிய சாகித்திய மண்டல விருதையும், “முறிந்த சிறகும் என் வானமும் ” புதுக்கவிதை நூல் கிழக்கு மாகாண சாகித்ய விருதையும் பெற்றுள்ளன.

இலங்கை,இந்தியா,மலேசியா உட்பட பல நாடுகளிலும் இதுவரை 79 விருதுகளைப் பெற்றுள்ள கவிஞர் ஜவ்பர்கான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டூத்தாபனத்திப் கடமை புரிந்ததுடன் முழுநேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகின்றார்.

ஊடகத்துறையில் பல உயர் விருதுகளைப்பெற்ற இவர் சத்தியம்,கிழக்கு மண்,வாரவலம் ஆகிய செய்திப்பத்திரிகைகளினதும் பிரதம ஆசிரியருமாவார்.

காதாதான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவராக இருக்கும் இவர் கழகத்தினுடைய இதுவரை 17 நூல்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நூற்றிற்கும் அதிகமான கவியரங்குகள் பாடியுள்ள இவர் சுமார் 30 கவியரங்குகளுக்குமேல் மலேசியா மற்றும் இலங்கையின் நாலா பக்கங்களிலும் தலைமை தாங்கியுள்ளார்.

நாடெங்கிலுமுள்ள 50 தமிழ், முஸ்லிம் கவிஞர்களை ஒன்றிணைத்து ‘நதியைப்பாடும் நந்தவனங்கள்” என்ற கவிதை நூலை வெளியிட்டதுடன் 50 கவிஞர்களையும் ஒரே மேடையில் ஏற்றி பொற்கிழி வழங்கி கௌரவித்ததுடன் TOP 100 காத்தான்குடி எனும் நிகழ்ச்சியினூடாக ஒரே மேடையில் 100 பல்துறையாளர்களுக்கு உயரிய விருது வழங்கி கௌரவித்து சாதனை படைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது வாரவலம் எனும் யூடியூப் அலைவரிசையில் நிறுவனருமாவார்.