கோறளைப்பற்று வாழைச்சேனை- சிறுவர் தினம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

“உலகை வழிநடாத்த அன்பால் போஷியுங்கள்” எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால் ஏறபாடு செய்யப்பட்ட நிகழ்வு கும்புறுமூலை அறக்கட்டளை நிலையத்தில் அண்மையில்(10.10.2025) இடம்பெற்றது.

இந் நிகழ்வு பிரதேச செயலாளர் ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் ஆரம்பமானதுடன், இதில் உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலக கணக்காளர், சமுர்த்தி முகாமையாளர், கோட்ட கல்வி அதிகாரி, வாழைச்சேனை, கல்குடா சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலக ஏனைய உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்கள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மங்கள விளக்கேற்றளுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் மாணவிகளினால் வரவேற்பு நடனம், பாடல், சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டும் நாடகங்கள், நடனம், விளையாட்டு எனப் பலதரப்பட்ட நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டன.

இதன் போது நிகழ்வில் பங்குபற்றிய மாணவ மாணவிகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.