(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
அகில இலங்கை பாடசாலை ரீதியாக நிந்தவூரில் நடாத்தப்பட்ட கபடிப் போட்டியில் 20 வயது ஆண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற கமு /கமு/அல் அஷ்ரக் தேசிய பாடசாலை மற்றும் 17 வயது ஆண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற கமு/ கமு /அல் மதீனா தேசிய பாடசாலை மாணவர்கள் தார்மீக சமூகத்துக்கான சமூக விழிப்புணர்வு அமைப்பான சம்ஸ் ஸ்ரீலங்கா அமைப்பினால் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில், மாஸ்டர் மெய் வல்லுனர் போட்டிகளில் விளையாடி தங்கம் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்ற சிரேஷ்ட வீரர்களும் 35 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் தேசிய ரீதியாக தங்கப்பதக்கம் வென்றவர்களையும் மெய்வல்லுனர் போட்டியில் தொடர்ச்சியாக சாதனைகள் படைத்துவரும் வீரர்களும் (SAMS SRILANKA) அமைப்பினால் கௌரவிக்கப்பட்டனர்.
தார்மீக சமூகத்துக்கான சமூக விழிப்புணர்வு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்டமான இந்நிகழ்வை அவ் அமைப்பின் தலைவர் ஏ.ஜே .ஜனுபர் தலைமை தாங்கி நடத்தி இருந்தார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ .எம். அப்துல் லத்தீப், கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள ஆணையாளர் எம்.பி முஹம்மத் சுஃபியான் ஆகியோர் கலந்து கொண்டதோடு, விசேட அதிதியாக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் ஏ அஸ்பர் ஜே. பி. மற்றும் கௌரவ அதிதிகளாக கல்முனை கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் அல்ஹாஜ் யு.எல்.எம். சாஜித், நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி .ஏ.டபிள்யூ.எஸ். நிசாந்த வெதகெ, அம்பாறை மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தரும் அம்பாறை மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளருமான ஏ.எல். அனஸ் அஹமட் ஆகியோர் கலந்துகொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில், தங்கம் வென்ற அத்தனை மாணவர்களுக்கும் சிரேஷ்ட வீரர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, பிரதம அதிதிகளுக்கும் பொன்னாடை போத்தி நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.


