அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) கல்விப் பிரிவு தேசிய அளவில் சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று முதல் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) கட்சியின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில் உயர் தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும், சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

இந்த தேசிய அளவிலான கௌரவிப்பு நிகழ்வுகளுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாணவர்களை கெளரவிக்கவுள்ளார்.

கல்வித் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவித்து அவர்களின் எதிர்கால கல்விப் பயணத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் இந்நிகழ்வு முன்னெடுக்கப்படுவதாக கட்சியின் கல்விப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வகையில்,

இன்று (10) வெளிக்கிழமை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு சம்மாந்துறை பொது மண்டபத்தில் இடம்பெறவுள்ளதுடன்,

சனிக்கிழமை (11) மாலை 4 மணிக்கு கல்முனை வலயத்தில் தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது வெலிவோரியன் மண்டபத்தில் இடம்பெறவுள்ளதுடன்,

எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை புத்தளம் மாவட்டத்தில் தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன்,

எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன்,

எதிர்வரும் 17 ஆம் திகதி, மன்னார் மாவட்டத்தில் தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன்,

எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 9 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், மாலை 4 மணிக்கு வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ளதுடன்,

எதிர்வரும் 19 ஆம் திகதி காலை 9 மணிக்கு குருணாகல் மாவட்டத்தில் தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுகளுக்கு, கட்சியின் அரசியல் அதிகார பீட உறுப்பினர்கள், உயர்பீட உஉப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.