யாழில் சட்டத்தரணி கைதினை கண்டித்து போராட்டத்தில் குத்தித திருமலை சட்டத்தரணிகள்!

யாழ்ப்பாணம் மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் நேற்று (06)பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கம் இன்று (07) கவனயீர்ப்பொன்றை திருகோமணமலை நீதிமன்றம் முன் ஏற்பாடு செய்தனர்.

இவ்வாறான கைதுகள் முறையற்றதாக இடம் பெற்றுள்ளதாலும் யாழில் இக் கைதுக்கு எதிராக யாழ் சட்டத்தரணிகளும் கவனயீர்ப்பில் ஈடுபடுவதனை கண்டித்து இடம் பெறும் போராட்டத்துக்கு ஆதரவாக இதனை முன்னெடுப்பதாகவும். இவ் அடையாள எதிர்ப்பானது புதிய நீதி முறை பின்பற்றாது பொலிஸார் அராஜகத்தை கண்டிக்கிறோம் இவ் அத்துமீறிய கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் இதன் போது ஊடகங்களுக்கு சட்டத்தரணி திலகரட்ணம் துஷ்யந்தன் தெரிவித்தார்.