முள்ளிப்பொத்தானையில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

ஹஸ்பர் ஏ.எச்_

கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் அனுசரணையுடன் இவ்வைத்திய முகாம் நடைபெற இருக்கின்றது. இதில் சிரேஷ்ட ஆயுர்வேத வைத்திய நிபுணர், தேர்ச்சி பெற்ற ஆயுர்வேத வைத்தியர்களும் சிகிச்சை அளிப்பதற்காக வருகை தரவுள்ளனர்.
இவ்வைத்திய முகாமில் பின்வரும் சிகிச்சை முறைகள் இடம்பெற இருக்கின்றன.குறித்த இலவச வைத்திய முகாமானது எதிர்வரும் – 2025.10.07 ந் திகதி செவ்வாய்க் கிழமை அன்று காலை 10.00 – மதியம் 2.00 மணி வரை முள்ளிப்பொத்தானை
96 ,அக்ரபோதிய விகாரையில் இடம் பெறவுள்ளது. இதில் பின்வரும் சேவைகளை பொது மக்கள் முற்றிலும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

1) சீனி நோயிக்கான இரத்த பரிசோதனை , ஆலோசனை

2) சிறுநீரக வியாதிற்கான விஷேட வைத்திய சிகிச்சை முறைகள், ஆலோசனை

3) பக்கவாதம் , முழங்கால் வலி ,முதுகு வலி , இடுப்பு வலி , தசை பிடிப்பு போன்ற நோய்களுக்கான விஷேட வைத்திய சிகிச்சை

4) அக்கியுபஞ்சர், கப்பிங், பத்து கட்டுதல், சீனி வியாதிக்கான நாட்பட்ட காயங்களுக்கான மருந்து கட்டுதல் போன்றவற்றுக்கான சிகிச்சை

எனவே இவ்வாய்ப்பினை தவறவிடாது அனைவரும் கலந்துகொண்டு சிகிச்சைகளையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.