ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் 16ம் நாளாக இன்றும் (02) திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக சத்யாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அபகரிக்கப்பட்ட விவசாய நிலங்களை பெற்றுத்தரக் கோரியே குறித்த விவசாயிகள் போராடி வருகின்றனர். பிரதமர் அலுவலகம் முன்பாக போராடிய போது பத்து நாட்களுக்குல் தீர்வு வழங்குவதாக கூறிய நிலையில் தற்போது கௌரவ பிரதமர் அவர்களின் பதிலுக்கு இன்னும் 02 நாட்களே உள்ளது இதனால் தீர்வை வழங்குமாறு கோருகின்றனர்.


